முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று (11) இரவு நாட்டை விட்டு வெளியேறுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அவர் கட்டுநாக விமான நிலையத்தில் பட்டுப்பாதை (சில்ல் ரூட்) (Silk Route/CIP) புறப்படும் முனையத்தை வந்தடைந்ததை அடுத்து, குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் தமது கடமைகளில் இருந்து விலக நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன்படி, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேற முடியாது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு நள்ளிரவு முதல் மறு அறிவித்தல் வரை பட்டுப்பாதை பயணிகள் அனுமதி நடவடிக்கைகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக இலங்கை குடிவரவு குடியகழ்வு அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)