மாண்புமிகு சபாநாயகர் அவர்கள் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதத்தை இலங்கையில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தின் ஊடாக பெற்றுக்கொண்டுள்ளார்.
இதன் சரியான தன்மையை மீள் பரிசோதித்து அனைத்து சட்ட நடைமுறைகளையும் பூர்த்தி செய்த பின்னர் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளைய தினத்திற்குள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என கௌரவ சபாநாயகர் அவர்கள் தெரிவிக்கின்றார். (யாழ் நியூஸ்)