விக்னேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரின் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
"எல்லாக் கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். அரசாங்கம் எந்த மாதிரியான கொள்கைகளை உருவாக்கப் போகிறது என்பதும் முக்கியம். 'பிரதான அதிகாரங்கள் முறையே ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகியோரிடம் உள்ளதை நாம் அறிவோம். ஆனால் நாட்டின் தற்போதைய சூழ்நிலை காரணமாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் இருவரும் ஒரே நேரத்தில் வெளியேறினால் நாட்டில் பிரச்சினைகள் மேலும் அதிகரிக்கலாம்.
எனவே முதலில் ஒருவர் வெளியேறி பின்னர் புதிய அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், மற்றையவர் வெளியேறுவது பொருத்தமானது என்பது எனது கருத்து." என்றார்.