எதிர் கட்சியை சேர்ந்த அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து அமைக்கப்படவுள்ள அரசாங்கம் தொடர்பில் உடன்படிக்கைகள் வெற்றியளித்து வருவதாகவும், கூடிய சீக்கிரத்தில் இதற்கான முடிவுகள் எட்டப்படும் நிலையிலுள்ளதாகவும் எதிர்கட்சியின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
அந்த அரசாங்கத்தின் பிரதமர் பதவிக்கு மைத்திரிபால சிறிசேன, சஜித் பிரேமதாச, அனுர திஸாநாயக்க மற்றும் கரு ஜயசூரிய ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தேவை ஏற்படின் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது பதவியை இராஜிநாமா செய்ய தயராக இருப்பதாகவூம் அவர் கூறினார்.
மேலும் இடைக்கால அரசை அமைப்பதா அல்லது அரசின் காலக்கெடு முடியும் வரையிலான ஆட்சி முறையை ஒன்றுக்கு செல்வதா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
எவ்வாராயினும் தற்போதைய அரசாற்சிக்கு முடிவு கட்டப்படும் என்றும், அரசியல் கட்சிகளுக்கிடையில் பகிறப்பட வேண்டிய அதிகாரங்கள் பதவிகள் கணக்கு வழக்குகள் பற்றி பி்ன்னர் ஆராயப்படும் எனவும் தெரிவித்தார்.
அவ்வாறு அமையும் நிர்வாக அளகுகளின் திருத்தங்கள் பற்றி ஆராயப்பட்டு வருகிறது. இதுவரை நடந்த பேச்சு வார்த்தைகளில் அமையும் புதிய சர்வ கட்சி அரசாஙாகத்தை நாட்டின் தீவிர பிரச்சினைக்கு உடனடித் தீர்வு எட்டப்படும் வரை காலவரையறையுடன் புதிய அரசாங்கத்தை நடாத்திச் சென்று பின்னர் தேர்தல் ஒன்றுக்கு செல்வது என்ற ஆலோசனைக்கு அனைத்து கட்சிகளும் உடன் பட்டுள்ளது.
இவ்வாறான ஒரு ஆலோசனையுடனான மகஜர் ஒன்றை அனுர குமார திஸாநாயக்க அண்மையில் பாராளுமன்றத்தில் கையளித்து விளக்க உறையாற்றியமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இவ் ஆலோசனைக்கு தற்போது ஆளும் காட்சியில் உள்ள பல உறுப்பினர்கள் ஆதரவளிக்க முன்வந்துள்ளதாகவும் அறியக்கிடைக்கின்றது.
( பேருவளை ஹில்மி )