பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சமகி ஜன பலவேகய பங்கேற்காது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பதவி விலக வேண்டுமென பொதுமக்கள் தெளிவாகக் கூறுகின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் பிரேமதாச அறிக்கையொன்றை வெளியிட்டார்.
பொதுமக்களின் எதிர்ப்புக்களால் வளைக்கப்பட்டிருந்த ராஜபக்சக்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாதுகாத்து மீண்டும் அரசியல் களத்தில் பிரவேசிக்க வழிவகுத்துள்ளதாக அவர் மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி பொதுமக்களுடன் நிற்பதாகவும், வெற்றி அடையும் வரை மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் என்றும் கூறிய அவர், அரசுடன் எந்த பேச்சுவார்த்தையிலும் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காது என்றும் கூறினார். (யாழ் நியூஸ்)