இலங்கையின் பிரபல கோடீஸ்வர வர்த்தகரான தம்மிக பெரேரா தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டு இன்னும் ஒரு மாதம் கூட நிறைவடையவில்லை.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ச பதவி விலகியதால் தம்மிக்க பெரேராவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைத்தது.
பசில் ராஜபக்ச பதவி விலகியதன் பின்னர் வெற்றிடமாக இருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தம்மிக்க பெரேராவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டது.
வர்த்தகர்கள் நாடாளுமன்றத்திற்கு வரும்போது பின்பற்றப்படும் வழமையான நடைமுறையின் படி தம்மிக்க பெரேராவும் தனக்கு சொந்தமான அனைத்து நிறுவனங்களின் நிர்வாக பொறுப்புகளில் இருந்தும் விலகினார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பமான அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டு முன்னாள் அமைச்சர் தனது பதவியிலிருந்து விலக தீர்மானித்ததாக தெரிவித்துள்ளார்.