![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHQEFJa_5epeva6l3PmCVuwa5WvKr8w0cdbempxnRnMJrMIHK0u03td8_4ddJgQnYNbSvVRyT7tZIrLIC4yeH-GUtZv7c_m6GpfXgZkZ54r5PnNbfrfbbBvP8ma2VfZnu1zeybJ8TBKag/s16000/1657713702297443-0.png)
இந்திய ஆளும்கட்சியான பாஜக உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பதிவில், இந்த எச்சரிக்கையை விடுத்துள்ள அவர், கொழும்பில் சுற்றித் திரியும் கட்டுக்கடங்காத கூட்டத்தினர், நக்சல்கள், ஜெகாதிகள், சமூகவிரோதிகளால் வழி நடத்தப்படும் தகவல்கள் கிடைத்துள்ளன.
எனவே இந்த பிரிவுகளால் இலங்கையின் சீரழிவு மற்றும் தமது நாட்டின் எதிர்கால தாக்கம் குறித்து இந்தியா கவனம் செலுத்த வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி கோரியுள்ளார்.
முன்னதாக ராஜபக்சர்களை இந்தியா பாதுகாக்க, இந்தியா தமது படைகளை அனுப்ப வேண்டும் என்று சுப்பிரமணிய சுவாமி கோரியிருந்தார்.
எனினும் இந்த கோரிக்கையை இந்திய வெளிவிவகாரத்துறை நிராகரித்திருந்தது.