மேலும் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்குவதற்கு வாக்களித்த 134 பேரையும் பொதுமக்கள் பார்த்துக்கொள்வார்கள் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் நடத்தப்பட்டு வரும் ஆர்ப்பாட்டத்தை நசுக்க முயல்வதாக தெரிவித்த அவர்கள் படையினருக்கு தாம் பயப்படப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், புதிய வடிவில் ஆர்ப்பாட்டம் தொடர்வதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். (யாழ் நியூஸ்)