வங்கி முறைமையை பேணுவதற்கான முறையான வேலைத்திட்டத்தை அரசாங்கம் இன்னும் தயாரிக்கவில்லை என அதன் உப தலைவர் தனுஷ்க குமாரசிங்க குறிப்பிடுகின்றார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
"வங்கி அமைப்பின் செயல்பாட்டிற்கு ஒரு பெரிய நெருக்கடி உருவாகியுள்ளது. ஒன்று இந்த நாட்டின் சாதாரண குடிமக்களாகிய வங்கி ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும். வங்கிகளை நடத்தும் எந்த திட்டத்திலும் அரசு தலையிடவில்லை. அதனால், வங்கி ஊழியர்கள் பணிக்கு வரக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்படவில்லை.
மற்றொன்று, வங்கி அமைப்பை இயக்க மின்சாரம் தேவை. மின்வெட்டால் வங்கிகள் எரிபொருள் ஜெனரேட்டர்களைப் பயன்படுத்தி இயங்க வேண்டியுள்ளது. அப்போது வங்கிகளை இயக்க ஜெனரேட்டர்களை இயக்க எரிபொருள் வழங்கும் திட்டம் இல்லை. அவை ஒவ்வொன்றாக செயலிழந்து வருகி்ன்றன.
குறிப்பாக கிராமப்புறங்களில் வங்கிகளை இயக்க முடியாது. வங்கிகளை இயக்க ஜெனரேட்டர்களை பயன்படுத்த முடியாது. அவற்றில் எரிபொருள் தீர்ந்து விட்டது.
மேலும், ஊழியர்கள் பணிக்கு வரமுடியவில்லை. எனவே, இந்த வங்கிகளின் எதிர்காலத்திற்கான குறிப்பிட்ட திட்டம் எங்களிடம் முன்வைக்கப்படவில்லை. எனவே, எதிர்காலத்தில் வங்கிகளை நடத்துவதில் கடும் சிக்கல் ஏற்படும்’’ என்றார். (யாழ் நியூஸ்)