நாடளாவிய ரீதியில் உள்ள CEYPETCO மற்றும் லங்கா IOC பெற்றோல் நிலையங்களில் QR எரிபொருள் அனுமதிப் பத்திரம் இன்றும் (28) செயற்படுகின்றது. அதனைப் பயன்படுத்துவதில் சிக்கல் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எதிர்வரும் ஆகஸ்ட் முதலான் திகதி வரை மாத்திரம் வாகனத்தின் கடைசி இலக்கத்திற்கேற்ப எரிபொருள் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இன்று வாகனப் பதிவு எண் 6, 7, 8, 9 ஆகிய எண்களின் கடைசி இலக்கத்தைக் கொண்ட வாகனங்களுக்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்படுகிறது.
இதேவேளை, நேற்றைய நிலவரப்படி 4,479,376 பேர் QR எரிபொருள் அனுமதிப்பத்திரத்தில் பதிவு செய்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான குறிப்பு கீழே,