
குறித்த பகுதியில் உள்ள பொலிஸ் உயிர்காப்பு பிரிவுக்கு அருகில் இரண்டு இளம்பெண்கள் புகையிரதத்தில் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு, கோட்டையில் இருந்து அளுத்கம நோக்கி பயணித்த புகையிரதமே இவர்கள் மீது மோதியுள்ளது.
படுகாயமடைந்த சிறுமிகள் களுபோவில தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இரண்டு பெண்களும் உடன்பிறந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர் உடுபுஸ்ஸல்லாவ பகுதியைச் சேர்ந்த 20 வயதுடையவர். (யாழ் நியூஸ்)