நாட்டை தற்காலிகமாக முடக்குவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் எனினும் இது குறித்து இறுதி முடிவெடுக்கப்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டின் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காணப்படும் நீண்ட வரிசைகள் காரணமாக அத்தியாவசிய சேவையை சேர்ந்தவர்களால் எரிபொருள் பெறமுடியாத நிலை காணப்படுகின்றது.
எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் வரும்வரை இந்த நிலைமை தொடரலாம் என்ற அச்சநிலை காணப்படுகின்றது; இதன் காரணமாகவே அரசாங்கம் நாட்டை தற்காலிகமாக முடக்குவது குறித்து ஆராய்ந்து வருகின்றது.
தற்காலிக முடக்கம் காரணமாக நாட்டில் மீதமுள்ள எரிபொருட்களை அத்தியாவசிய சேவைகளை சேர்ந்தவர்கள் மாத்திரம் பெற்றுக்கொள்ளும் நிலையை ஏற்படுத்த முடியும் என அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.