
பிரதமர் என்ற வகையில் மேலும் பல கட்சிகளின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் திரு சஜித் பிரேமதாச அரசாங்கத்தை அமைக்கும் நிலையில் இருப்பதாக திரு அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அந்த அரசாங்கத்தை அமைப்பதற்கான நிபந்தனையாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகுவதற்கான காலக்கெடுவை சமர்ப்பிக்க வேண்டும் என்று அவர்கள் முன்வைக்கின்றனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கத்தினால் முடியவில்லை எனவும் ஜனாதிபதியை பதவி விலகுமாறு மக்கள் கோருவதாகவும் பிரதமர் ஏற்கனவே மக்களால் நிராகரிக்கப்பட்டவர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)