ஆறு மாதங்களுக்குள் நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர திஸாநாயக்க கூறியுள்ளதால் அதற்கு ஆதரவளிப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அநுர திஸாநாயக்க விரும்பினால் பிரதமர் பதவியை விட்டு விலகவும் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடு விழுந்துள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து ஆறு மாதங்களுக்குள் யாரேனும் மீண்டு வர முடிந்தால், அந்த நபருக்கு நோபல் பரிசு வழங்க முடியும் என்றும் அவர் கூறினார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.
இலங்கை அபிவிருத்தியடைந்து வரும் நாடு அல்ல, வங்குரோத்து நாடாகும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே அந்த வரம்பில் இருந்து இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடல்களை நடத்தியது என அவர் தொடர்ந்தும் கூறினார். (யாழ் நியூஸ்)