
அதன்படி குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 38 ரூபாவாக மாற்றியமைக்கப்படும் என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டன.
இந்த நிலையில், எரிபொருள் விலை குறைப்புக்கு ஏற்றவகையில் பேருந்து கட்டணங்களை குறைக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.
இந்நிலையில், புதிய பேருந்து கட்டணங்கள் இன்றைய தினம் வெளியிடப்படவுள்ளன.