
ஜூலை 09 ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் போது பொதுமக்கள் ஜனாதிபதி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆக்கிரமித்ததை அடுத்து குறித்த நபர் கொடியைத் திருடியுள்ளார்.
பொலிஸாரின் கூற்றுப்படி, அந்த நபர் தனது இடுப்பில் கொடியைக் கட்டிக்கொண்டு நடமாடுவதைக் காட்டும் சிசிடிவி காட்சிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அதன்பிறகு, சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோவில், அந்த நபர் கொடியை படுக்கை விரிப்பாகப் பயன்படுத்தியதாகவும், அதை எரித்து அழிக்கவும் நினைத்ததாகக் காட்டியது.
சிசிடிவி காட்சிகள் மூலம் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் அந்த நபரை பிடிக்க பொலிசார் விசாரணை நடத்தினர். (யாழ் நியூஸ்)