ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான அரசியலமைப்பு நடைமுறைகள் தற்போது முதல் அமுல்படுத்தப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஜனாதிபதி பதவிக்கான அதிகாரங்கள், செயல்பாடுகள் மற்றும் கடமைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அரசியலமைப்பின் படி பிரதமர் செயற்பட உள்ளார்.
இந்த ஜனநாயக செயற்பாட்டிற்கு அனைத்துக் கட்சித் தலைவர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அதிகபட்ச ஆதரவை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
அனைவரது ஒத்துழைப்போடு 7 நாட்களுக்குள் இச்செயற்பாடு நிறைவடையும் என எதிர்ப்பார்ப்பதாகவும், அதன்படி நாளை (16) சனிக்கிழமை பாராளுமன்றம் கூடும் எனவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பான அறிவிப்பு கீழே, (யாழ் நியூஸ்)