
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாத முதிர்ந்த தலைவருக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு கோரியுள்ளனர்.
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தெளிவான பாராளுமன்ற பெரும்பான்மையை வெல்லக்கூடிய தலைவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் டல்லஸ் அழகப்பெரும, சன்ன ஜயசுமன மற்றும் நாலக கொடஹேவ ஆகியோர் அடங்குவர். (யாழ் நியூஸ்)