கொழும்பில் குறிப்பிட்ட சில பகுதிகள் வன்முறையற்ற போராட்டங்களுக்கு இடமளிக்கப்பட்டுள்ளன.
கொழும்பிற்குள் விகாரமஹாதேவி பூங்கா, புதிய நகர மண்டபம், ஹைட் பார்க் மற்றும் கெம்பல் பார்க் போன்றவற்றில், திறந்தவெளி அரங்குகள் (தியேட்டர்கள்) உட்பட அனைத்து வசதிகளுடன் கூடிய இடங்களை வன்முறையற்ற போராட்டங்களுக்கு வழங்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, காலி முகத்திடலில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் போராட்டங்களை நடத்துவதற்கு முன்னர் அனுமதியளித்திருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்றுகூடுவதற்கு அனுமதித்த பிரதேசத்திலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் 'கோட்டகோகம' போராட்டத் தளம் நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்))