
இன்று (16) காலை அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
மேலும், எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முன்வைக்கப்படும் நிவாரண வரவு செலவுத் திட்டத்தில் இருந்து மேலதிக நிதியை இதற்காக பயன்படுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கும், செயற்பாடுகளை வலுப்படுத்துவதற்கும் ஜனாதிபதி இந்தக் கலந்துரையாடலில் பணிப்புரை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. (யாழ் நியூஸ்)