![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAuRBNIUPjpuwRXH8s-yf10XPfHFcloL2BxUebFGXcnSHih25UPBfFYLuisq_mSPBYi08m9mogfytzs9JvXAApcZizpLKRuUSpRBDB9Z0HV-RLuPOk3WZlBd6__e7s_f8IVclxtA7ustY/s16000/1657777141265596-0.png)
இதனையடுத்து, கோட்டாபய ராஜபக்ஷ இன்னும் சிறிது நேரத்தில் மாலைத்தீவில் இருந்து சிங்கப்பூர் செல்ல உள்ளதாக அங்கு களத்தில் உள்ள ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 11 மணியளவில் அவர் அங்கிருந்து புறப்படுவார் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிங்கப்பூர் பயணிப்பதற்காக குறித்த தனியார் ஜெட் விமானத்தின் வருகைக்காகவே, கோட்டாபய ராஜபக்ஷ, அவரது மனைவி மற்றும் பாதுகாவலர்கள் நேற்றிலிருந்து காத்திருந்துள்ளனர்.
இந்நிலையிலேயே, தனியார் ஜெட் விமானம் மாலைத்தீவில் தற்போது தரையிறங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.