அங்கு ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக, "கோட்டாபய ராஜபக்ச தனிப்பட்ட பயணமாக சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டார் என்பது உறுதி செய்யப்பட்டது.
அவர் புகலிடம் கோரவில்லை, அவருக்கு எந்த அடைக்கலமும் வழங்கப்படவும் இல்லை. சிங்கப்பூர் பொதுவாக புகலிடம் வழங்குவதில்லை" எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. (யாழ் நியூஸ்)
Update:
கோட்டாபய ராஜபக்ச "தனிப்பட்ட பயணத்தில் வந்துள்ளார். சமூக விசிட் பாஸில் இருக்கிறார்" என்று சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் நாட்டில் கோட்டாபயவுக்கு எதிரான போராட்டங்களுக்கு எதிராக மக்களை எச்சரிக்கும் காவல்துறை, "சட்டவிரோதமான பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் எவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளது.