ஏற்கனவே திட்டமிட்டபடி நாளைய தினம் (15) பாராளுமன்றம் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதம் கிடைத்தவுடன் மூன்று நாட்களுக்குள் பாராளுமன்றம் கூடும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஜூலை மாதம் 09 ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு தீர்மானம் எட்டப்பட்டது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புதன்கிழமை (13) இராஜினாமா செய்யும் பட்சத்தில், புதிய ஜனாதிபதிக்கான வேட்புமனுக்கள் ஜூலை 19 ஆம் திகதி கோரப்படும் என சபாநாயகரின் தலைமையில் கடந்த சனிக்கிழமை விசேட கலந்துரையாடலைக் கூட்டிய கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.
புதிய ஜனாதிபதியை நியமிப்பதற்கான வாக்கெடுப்பு நாளை மறுநாள் (20) நடத்தப்படும் எனவும் அவர்கள் தீர்மானித்திருந்தனர்.