நிலவும் எரிபொருள் நெருக்கடியால், நாடு முழுவதும் உள்ள கிராமப்புற வைத்தியசாலைகளின் பணிகள் முடங்கியுள்ளன.
தற்போது, அந்த வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை வீடுகளுக்கு அனுப்பும் பணியில் அந்த வைத்தியசாலைகளின் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
புறநோயாளிகள் சிகிச்சை நிலையங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.
எரிபொருள் நெருக்கடி காரணமாக வைத்தியசாலை ஊழியர்கள் பணிக்கு சமூகமளிக்க முடியாத நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகள் சிகிச்சைக்காக பிரதான வைத்தியசாலைக்கு மாற்றப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். (யாழ் நியூஸ்)