"நேற்று முன்தினம் நான் ஊடகவியலாளர்களை சந்தித்தபோது மிரிஹானை பிரதேசத்தை சேர்ந்த டேனியல் என்ற பர்கர் மதத்தை சேர்ந்த நபரொருவர் எனக்கு எதிராக சத்தம் எழுப்பி சென்றதை பார்த்திருப்பீர்கள்.
உண்மையில் இதனை ஏற்பாடு செய்தது ஒரு தொலைக்காட்சி ஊடகம், குறிப்பிட்ட வீடியோ காட்சி வரும் வரை அவர்கள் காத்திருந்ததும் எனக்கு கேள்விப்பட்டது.
அங்கிருந்த மற்ற ஊடகங்களுக்கு இவ்விடயம் தெரியாததால் அவர்கள் இதனை பெரிது படுத்தவில்லை. குறிப்பிட்ட ஒரு ஊடகமே இதனை வீடியோ செய்து வெளியிட்டது.
இது ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டை கொளுத்தியதற்கு மக்களை உசுப்பேத்தியது போன்றே எனக்கும் அந்த ஊடகம் செய்த ஒரு வேலையாகும்.
எனக்கு பொதுமக்களிடம் இனி செல்ல முடியாது என்று காட்ட வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம். மேலும் குறித்த அந்த ஊடகம் எனக்கு இவ்வாறு செய்வதற்கு நீண்ட காலமாக முயற்சித்து வந்தது.
அவர்கள் என்மீது முடியுமானவரை தாக்குதலும் நடத்தி உள்ளார்கள். நானும் அவர்களிடம் அடிவாங்கி உள்ளேன்.
ஆனாலும் நாம் இந்நாட்டில் அரசியல் செய்து கொண்டுதான் இருக்கிறோம். அவர்களுக்கு தேவை போன்று எமக்கு அரசியல் செய்ய முடியாது" என முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.