
ஜூன் மாதத்துடன் காலாவதியாகும் வாகன வருவாய் உரிமங்களுக்கு இன்று ஜூலை 29ஆம் திகதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், தற்போதைய எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு, வருவாய் உரிமங்களை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் அதிகாரிகளால் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், ஜூலையில் காலாவதியாகும் வாகன வருவாய் உரிமங்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)