இலங்கையின் பொருளாதாரம் மரணப் புள்ளியில் இருப்பதாக ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டுப் பொருளாதாரப் பேராசிரியர் ஸ்டீவ் ஹாங்க் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பணவீக்கம் தற்போது 122% ஆக உயர்ந்துள்ளதாக அவர் டுவிட்டர் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடன் வழங்க மறுத்துள்ளதாகவும், இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த சர்வதேச நாணய நிதியம் 16 வேலைத்திட்டங்களை தயாரித்துள்ளதாகவும், அந்த திட்டங்களை இலங்கை இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை எனவும் பேராசிரியர் ஸ்டீவ் ஹாங்க் சுட்டிக்காட்டியுள்ளார். (யாழ் நியூஸ்)