
இந்நிலையில் இன்றைய தினம் 18 அமைச்சர்களின் பதவிப் பிரமாணம் இடம்பெற்றது.

மொட்டு பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி வெளிவிவகார அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து, முன்னர் பதவி வகித்த ஜி.எல்.பீரிஸுக்குப் பதிலாக பதவியேற்றார்.
புதிய பிரதமராக தினேஸ் குணவர்தன இன்று காலை பதவிப்பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அதேநேரம், நிதி அமைச்சர் பதவியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தன்வசம் வைத்துக் கொண்டார். (யாழ் நியூஸ்)
தினேஸ் குணவர்த்தன – பிரதமர், பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள் அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா - கடற்றொழில் அமைச்சர்
சுசில் பிரேமஜயந்த - கல்வி அமைச்சர்
பந்துல குணவர்த்தன - போக்குவரத்து, ஊடகம், நெடுஞ்சாலை அமைச்சர்
கெஹெலிய ரம்புக்வெல்ல - சுகாதார அமைச்சர்
மஹிந்த அமரவீர - விவசாய அமைச்சர்
விஜேதாச ராஜபக்ச - நீதி அமைச்சர்
ஹரீன் பெர்னாண்டோ - சுற்றுலா மற்றும் காணி அமைச்சர்
ரமேஷ் பத்திரண - பெருந்தோட்ட அமைச்சர்
பிரசன்ன ரணதுங்க - நகர அபிவிருத்தி அமைச்சர்
அலி சப்ரி - வெளிவிவகார அமைச்சர்
விதுர விக்கிரமநாயக்க - புத்தசாசன அமைச்சர்
கஞ்சனா விஜேசேகர - மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்
நசீர் அஹமட் - சுற்றாடல் அமைச்சர்
ரொஷான் ரணசிங்க - விளையாட்டு, இளைஞர் விவகார அமைச்சர்
மனுஷ நாணயக்கார - தொழில் அமைச்சர்
டிரான் அலஸ் - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
நளின் பெர்னாண்டோ - வர்த்தக அமைச்சர்
