பத்தரமுல்லை குடிவரவு திணைக்களத்தில் கடவுச்சீட்டு வரிசையில் காத்திருந்த போது காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஹட்டன் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் காசல்வீதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
குழந்தையின் எடை 500 கிராம் எனவும் இது குறைந்த எடை எனவும் மகப்பேறியல் திணைக்களம் மற்றும் மருத்துவமனையின் மகளிர் மருத்துவ நிபுணர் திரு. சனத் லனாரோல் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)