இதன்படி யாழ்ப்பாணத்தின் தொலைதூர பிரதேசங்களிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எரிபொருள் கொடுப்பனவுக்காக சம்பளத்துடன் கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் வரவு வைக்கப்பட உள்ளது.
ஏனைய பிரதேசங்களிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருள் கொடுப்பனவாக ஒரு லட்சம் ரூபாவுக்கு மேலதிகமாக வழங்கப்படவுள்ளது.
கடந்த ஜூன் மாதம் வரை எரிபொருள் பழைய விலையின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருள் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.
எரிபொருள் பிரச்சனையால், வெகு தொலைவில் உள்ள பல எம்.பி.க்கள் மிக அரிதாகவே பாராளுமன்றத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)