போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவுக்கும் புகையிரத திணைக்களத்தின் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று (06) பிற்பகல் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்ததையடுத்து தொழிற்சங்கங்கள் தமது தொழில் நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு வழமை போன்று புகையிரத நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன.
அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்திய போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, அவற்றை உடனடியாக தீர்க்குமாறு அமைச்சின் செயலாளர் ரஞ்சித் பேமசிறி, புகையிரத பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
எரிபொருள் பற்றாக்குறை, சில ரயில்கள் இயங்காததால் சேவையில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து ஆலோசிப்பதே இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமாக உள்ளதாக கூறப்படுகிறது.
புகையிரத திணைக்களத்திற்கு குறைந்த அளவு பெற்றோல் கிடைப்பதால், தேவையான அனைவருக்கும் வழங்கினால் அவை போதாது என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.
மேலும், போக்குவரத்து பிரச்சனையை தீர்க்க, ரயில்வே திணைக்களத்தின் வாகனங்கள் மற்றும் போக்குவரத்து சபையில் இருந்து சில பேருந்துகளை எடுத்து, ரயில்வே திணைக்கள ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதிகளை செய்து கொடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)