ஜூலை 31 ஆம் திகதிக்குள் வீட்டு சமையல் சிலிண்டர்களுக்கான வரிசைகளை அகற்ற எதிர்பார்த்துள்ளதாக லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் முதன்மை எரிவாயு விநியோகஸ்தரான லிட்ரோ நிறுவனம் ஒக்டோபர் இறுதிவரை நாட்டில் போதியளவு இருப்புக்களை பேணுவதற்கு நம்புவதாக நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.
சமையல் எரிவாயுவினை இறக்குமதி செய்ய முடியாத காரணத்தினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த லிட்ரோ நிறுவனம் , சமை எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை திங்கட்கிழமை (11) மீண்டும் ஆரம்பித்துள்ளது.
நேற்று (12) முதல் 120,000 சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதற்கான ஏற்பாடுகளை நிறுவனம் மேற்கொண்டுள்ளதாக முதித பீரிஸ் அறிவித்துள்ளார்.
தற்போது, சமையல் எரிவாயு கொள்வனவு செய்யும் போது, பதுக்கல்லை குறைக்கும் வகையில், மே மாதத்துக்கான மின் கட்டணத்தை பொதுமக்கள் சமர்ப்புக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
12.5 கிலோகிராம் சிலிண்டர்களின் விலை உயர்த்தப்பட்டாலும், கறுப்புச் சந்தையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்ய வேண்டாம் என்று அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் ஜூலை இறுதி வரை 33,000 மெட்ரிக் டன் எல்பி எரிவாயுவையும், இந்த ஆண்டு ஒக்டோபர் இறுதி வரை 100,000 மெட்ரிக் டன் எல்பி எரிவாயுவையும் கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
உலக வங்கியுடன் தேவையான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டு, முதற்கட்ட ஏற்றுமதிக்கான கொடுப்பனவுகள் தீர்க்கப்பட்டுவிட்டதாகக் கூறிய அவர், தேவையான கையிருப்புகள் பாதுகாக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கத் தேவையில்லை என்றார்.
ஜூலை 16 ஆம் திகதி 3,200 மெட்ரிக் டன் இறக்குமதி செய்யப்பட உள்ளதாகவும், 20,000 மெட்ரிக் டன் கொண்ட கப்பல் தற்போது மாலத்தீவு கடலை நெருங்கி வருவதாகவும் பீரிஸ் கூறினார்.
ஜுலை 20ஆம் திகதி தொடக்கம் நான்கு கப்பல்களில் இருந்து கெரவலப்பிட்டி எரிவாயு முனையத்திற்கு எரிவாயுவை வெளியிடுவதற்கு லிட்ரோ நிறுவனம் எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)