
ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் மேல் மாகாணத்தில் சாதாரண கட்டணத்தின் கீழ் சுமார் 40 பஸ்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மெரெண்டா தெரிவித்தார்.
கொழும்பு பிரதான பாடசாலைகள் மற்றும் கம்பஹா, களுத்துறை, ஹொரணை, ஹோமாகம, மஹரகம மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள ஏனைய பாடசாலைகள் போன்ற பிரதேசங்களில் உள்ள பிரதான பாடசாலைகளுக்கு இலகுவான பயணத்தை வழங்கும் வகையில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய பஸ்களின் எண்கள் மற்றும் புறப்படும் நேரங்கள் கீழே உள்ளன, (யாழ் நியூஸ்)

