
ஜனாதிபதி செயலகத்தில் தங்கியிருந்த ஆர்பாட்டக்காரர்கள் இன்று (22) காலை வெளியேற்றப்பட்டமை தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு நீண்ட விளக்கமளித்துள்ளது.
அச்சுறுத்தல், அழுத்தம், வன்முறை அல்லது கலவரத்தை கட்டவிழ்த்து விடுவதன் மூலம் பொது அமைதியை சீர்குலைக்கும் மற்றும் தொந்தரவு செய்யும் வகையில் செயல்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை வலியுறுத்துகிறது.
அத்துடன், குறித்த வளாகத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களை பல சந்தர்ப்பங்களில் துன்புறுத்தியும், இடையூறு செய்தும், அசௌகரியத்தை ஏற்படுத்தியதாகவும் பொலிஸார் காணொளி ஒன்றை வெளியிட்டு சுட்டிக்காட்டியுள்ளனர். (யாழ் நியூஸ்)