ஆர்ப்பாட்டக்காரர்களால் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதமர் அலுவலகத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கையளிக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அமைதியான முறையில் ஆட்சி மாற்றத்துக்காக அரசியல் தலைவர்களுக்கு இடமளிக்குமாறும் சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் அமைதியான ஆர்ப்பாட்டங்களை அனுமதிக்க முடியும் என்றும் ஆனால் சட்டவிரோத மற்றும் அரசியலமைப்புக்கு எதிராக முன்னெடுக்கப்படும் எவ்வித போராட்டங்களையும் தமது சங்கம் அனுமதிக்காது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.