சோசலிச வாலிபர் சங்கம், சோசலிச மாணவர் சங்கம், சோசலிச கலை சங்கம் போன்ற அமைப்புகளே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதாக அவர் கூறுகிறார்.
தற்போதைய பாராளுமன்ற அமைப்புக்கும் மக்களின் விருப்பத்திற்கும் இடையில் பாரிய முரண்பாடு காணப்படுவதாகவும் அதனால் விரைவில் புதிய பாராளுமன்றத்தை அமைப்பது மிகவும் முக்கியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த சந்தர்ப்பம் கிடைக்கும் வரை இடைக்கால நிர்வாகம் அவசியம் என்றும் அந்த காலக்கட்டத்தில் நாட்டைக் கைப்பற்றுவதற்கு தமது கட்சி தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)