சமூக ஊடகங்கள் மற்றும் பிற வழிகளில் பொய்யான அறிக்கைகள் மூலம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான தவறுகளை செய்யும் நபர்களுக்கு எதிராக கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஏற்கனவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.