ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் இல்லம் ஆகிய இடங்களை போராளிகள் கைப்பற்றியதன் பின்னர், பெறுமதியான பல பொருட்கள் மற்றும் பழங்கால பொருட்கள் காணாமல் போயுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்படுவதாவது,
சிலர் அங்குள்ள உடைமைகளை எடுத்துச் செல்லும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அந்தக் கட்டிடங்களில் உள்ள குளியலறைகள், சமையலறைகள் மற்றும் இதர உபகரணங்களும் பெரிய அளவில் சேதமடைந்துள்ளன.
கடந்த 09ஆம் திகதி, போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கட்டடம், பொதுமக்கள் பொருட்காட்சிக்கு திறக்கப்பட்டதையடுத்து, அதேநேரம், ஏராளமானோர் கண்டுகளித்தனர்.
இந்நிலையில், ஜனாதிபதி மாளிகை மீது தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர், தொல்பொருள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் சேதப்படுத்தப்பட்டதா அல்லது கொள்ளையடிக்கப்பட்டதா என்பதை மதிப்பிடுவதற்காக தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரிகள் குழு இன்று ஜனாதிபதி மாளிகைக்கு சென்றுள்ளது. (யாழ் நியூஸ்)