
இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயுவை தமது முனையங்களில் மீள் நிரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விநியோக முகவர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மூலம் இந்த மீள் நிரப்பப்பட்ட எரிவாயு கொள்கலன்களில் அதிகளவில் தினசரி விநியோகிக்கவுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், மோசடியான வர்த்தகர்கள் அதிகபட்ச சில்லறை விலையை விட அதிகமாக எரிவாயுவை விற்பனை செய்வதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறான வர்த்தகர்கள் தொடர்பில் அறிவிக்க 1,345 என்ற வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொள்ளுமாறு லாஃப்ஸ் நிறுவனம் நுகர்வோரை கோரியுள்ளது.