ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜூலை 13ஆம் திகதி பதவி விலகினால், எதிர்வரும் 20ஆம் திகதி புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, ஜூலை 13ஆம் திகதி ஜனாதிபதி பதவி விலகினால் பின்வரும் நிகழ்வுகள் இடம்பெறும்,
1. ஜூலை 15ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும்.
2. ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனுக்கள் ஜூலை 19ஆம் திகதி ஏற்கப்படும்.
3. ஜனாதிபதி ஜூலை 20ஆம் திகதி தேர்ந்தெடுக்கப்படுவார். (யாழ் நியூஸ்)