எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தின் பின்னர் நுரைச்சோலை மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியின் அளவு கிடைக்காவிட்டால் இவ்வருட இறுதியில் அரை நாள் மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போது செப்டெம்பர் மாதம் வரை 5 இலட்சம் மெற்றிக் தொன் நிலக்கரி இருப்பதாகவும், செப்டெம்பர் மாதத்திற்கு பின்னர் மார்ச் மாதம் வரை 25 இலட்சம் மெற்றிக் தொன் நிலக்கரி தேவைப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய நிதி நெருக்கடியில் 800 மில்லியன் டொலர்கள் செலவாகும் என்பதால் அதனை கொள்வனவு செய்ய முடியாவிட்டால் பெரும் மின்சார நெருக்கடி ஏற்படும் என அவர் குறிப்பிடுகின்றார்.
தற்போது உலக சந்தையில் ஒரு மெட்ரிக் டன் நிலக்கரி 325 டொலர் முதல் 350 டொலர் வரை உள்ளதாகவும், இது முன்னைய கொள்வனவுகளை விட மூன்று மடங்கு அதிகமாகும் எனவும் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடிக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் தருணத்தில் 900 மெகாவோட் நுரைச்சோலை மின் உற்பத்தியை இழந்தால் பாரிய மின்சார நெருக்கடி ஏற்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)