
ஏற்கனவே 104 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா ஒரு கோடி ரூபா முன்பணம் வழங்கப்பட்டுள்ளதாக கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார்.
கடந்த மே மாதம் 09ஆம் திகதி இடம்பெற்ற குழப்பமான சூழ்நிலையில் வீடுகள் இடிந்த சபை உறுப்பினர்களுக்கு தளபாடங்களுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னிலை சோசலிசக் கட்சி நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)