சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட நான்கு முக்கிய தீர்மானங்களை ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா வெளிப்படுத்தியுள்ளார்.
பெரும்பான்மையான கட்சித் தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நான்கு முக்கிய முடிவுகள் பின்வருமாறு:
இதேவேளை, ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக வேண்டும் என பெரும்பான்மையான கட்சித் தலைவர்கள் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக நீதியமைச்சர் விஜேசேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் ஒரு வார காலத்திற்கு ஜனாதிபதியாக பதவியேற்க வேண்டும் என்று கட்சித் தலைவர்களும் ஒப்புக்கொண்டதாக அமைச்சர் கூறினார்.
பாராளுமன்றத்தை கூட்டி சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும் எனவும் அதன் பின்னர் இடைக்கால ஜனாதிபதியை நியமிக்க வேண்டும் எனவும் கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

- ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் உடனடியாக பதவி விலக வேண்டும்
- சபாநாயகர் அதிகபட்சமாக 30 நாட்களுக்கு ஜனாதிபதியாக செயல்படுவார்
- எஞ்சிய காலத்திற்கு பாராளுமன்ற உறுப்பினரை ஜனாதிபதியாக பாராளுமன்றம் தேர்ந்தெடுக்கும்
- இடைக்கால சர்வகட்சி ஆட்சியை நியமித்து விரைவில் தேர்தல் நடைபெறும்
இதேவேளை, ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக வேண்டும் என பெரும்பான்மையான கட்சித் தலைவர்கள் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக நீதியமைச்சர் விஜேசேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் ஒரு வார காலத்திற்கு ஜனாதிபதியாக பதவியேற்க வேண்டும் என்று கட்சித் தலைவர்களும் ஒப்புக்கொண்டதாக அமைச்சர் கூறினார்.
பாராளுமன்றத்தை கூட்டி சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும் எனவும் அதன் பின்னர் இடைக்கால ஜனாதிபதியை நியமிக்க வேண்டும் எனவும் கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
முதலில் பிரதமர் இந்த உடன்படிக்கைகளுக்கு ஒப்புக்கொள்ளாத போதும் கடைசியில் ஒப்புக்கொண்டுள்ளார்
(யாழ் நியூஸ்)