
இன்று மாலை 04.00 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடி விரைவான தீர்மானத்தை எடுப்பதற்காக அவசர கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கும் அழைப்பு விடுத்தார்.
பாராளுமன்றத்தை கூட்டுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் பிரதமர் கோரிக்கை விடுத்திருந்தார்.
தற்போதைய நெருக்கடி நிலை தொடர்பில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் இன்று இடம்பெற்ற அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பொதுமக்கள் ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தை முற்றுகையிட்டனர். (யாழ் நியூஸ்)