இலங்கைக்கான உணவு மற்றும் மருந்துக்கான உலகளாவிய கோரிக்கையை முன்வைக்க ஐக்கிய நாடுகள் சபை தயாராக உள்ளது.
இலங்கை அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனை அமைச்சர் ஜி. எல். பீரிஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ கோரிக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதி முன்வைக்கப்படவுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் உணவு நெருக்கடிக்கு உதவுவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளை இலங்கையில் சந்தித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளார். (யாழ் நியூஸ்)