தென் கொரியாவில் வேலைவாய்ப்பிற்கு தகுதி பெற்ற 5,800 பேர் தொடர்பில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, கொரிய மனிதவளத் திணைக்களத்தின் பணிப்பாளரும் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியுமான லீயுடன் கலந்துரையாடியுள்ளார்.
இதன் போது சாதகமான தீர்வை வழங்குவதற்கு கொரிய தூதுவர் இணங்கியுள்ளதாக தெரிவித்த அமைச்சர், வேலை வாய்ப்புக்கு தகுதியான 5800 பேரும் கொரியாவிற்கு அழைத்து வரப்படுவார்கள் என உறுதியளித்தார்.
அதன்படி, அடுத்த வாரம் முதல் வாரத்திற்கு ஒரு விமானம் 200 இலங்கை பணியாளர்களை கொரியாவுக்கு ஏற்றிச் செல்லும், அதன் பிறகு வாரத்திற்கு இரண்டு விமானங்களாக அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. (யாழ் நியூஸ்)