இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கிகள் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் சாந்த சில்வா, இலங்கையில் ஒப்பந்த அடிப்படையில் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து எரிபொருள் தாங்கிகளும் நாளை முதல் விநியோக நடவடிக்கையில் இணையுமாறு நிறுவனத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதற்கிடையில், அத்தியாவசிய சேவைகளை தடையின்றி நடத்தும் வகையில், லங்கா ஐஓசி நிறுவனத்திடம் இருந்து 7,500 மெட்ரிக் தொன் டீசலை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. (யாழ் நியூஸ்)