நாட்டில் உள்ள தனியார் சேவை துறையிடம் தொழிலாளர் அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில், வீடுகளில் இருந்து பணியாற்றும் அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என தொழிலாளர் அமைச்சின் செயலாளர் ஏ.ஜே. விமலவீர கோரிக்கை விடுத்துள்ளார்.
அரச துறை தொடர்பில் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் தனியார் துறையை பாதிக்காது என செயலாளர் கூறுகிறார்.
எவ்வாறாயினும், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையைக் கருத்தில் கொண்டு, நிலைமைக்கு தீர்வு காணப்படும் வரை அரசாங்கத்திற்கு தேவையான உதவிகளை வழங்குமாறு தனியார் துறையிடம் கோரிக்கை விடுக்கப்படுவதாக செயலாளர் குறிப்பிடுகின்றார்.

நிறுவனங்களின் பணிகளை நடத்துவதற்குத் தடையாக இல்லாத பொருத்தமான வேலைத்திட்டத்தை ஏற்றுக்கொள்ளுமாறு தனியார் துறையையும் செயலாளர் கேட்டுக்கொள்கிறார். (யாழ் நியூஸ்)