நீதவான் திலின கமகேவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்று முன்னர் அவ்விடத்தை விட்டு வெளியேறியுள்ளார்.
இன்று (09) இரவு 8.00 மணிக்கு முன்னதாக நீதிமன்றத்தில் சரணடையுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையடுத்து அவர் இன்று பிற்பகல் மஹரகம பிரதேசத்திலுள்ள நீதவான் திலின கமகேவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வந்திருந்தார்.
இதேவேளை, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்ததுடன், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிறைவேற்றப்படவில்லை. (யாழ் நியூஸ்)