அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றும் சற்று உயர்வடைந்துள்ளது.
நேற்றைய தினத்தை ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி ரூ. 0.15 என முன்னேற்றம் கண்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டாலரின் கொள்முதல் விலை ரூ. 355.81, விற்பனை விலை ரூ. 367.07 என பதிவாகியுள்ளது.
வேறு சில வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக, குறிப்பாக யூரோ மற்றும் ஸ்டெர்லிங் பவுண்டுகளுக்கு எதிராக ரூபாய் மதிப்பு குறைந்துள்ளது.